Friday, August 16, 2019

கன்னிமூல‌ கணபதிய வேண்டிக்கிட்டு | சாஸ்தா தாசன் | வேம்புலி அம்மன் கோவில் ...





கன்னி மூல கணபதிய வேண்டிகிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் ஐயப்பா ஐயப்பா என்றே சொல்லி நாங்க ஆறு வாரம் தானே நோம்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிகிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமையா (2) ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிகிட்டு யாத்திரையாய் நடந்தது வந்தோமையா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை தரிசனமே செய்துகிட்டு வந்தோமையா நாங்க (2) எருமேலி பேட்டை துள்ளி வாபரையே வேண்டிகிட்டு பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமையா (2) காளை கட்டி அஞ்சல் வந்து அழுதைமலை ஏறிக்கிட்டு கரிமலையின் உச்சியிலே வந்தோமையா (2) பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களை தொலைத்துவிட்டு (2) நீலிமலை ஏறிகிட்டு வந்தோமையா.... பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி கற்பூர ஜோதிதனைக் கண்டோமையா (2) மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு மணிகண்டா உன் பெருமை அறிந்தோமையா (2) சுவாமியே சரணம் .....ஐயப்பா..... சரணம்... சுவாமியே சரணம் .....ஐயப்பா..... சரணம்... சுவாமியே சரணம் சரணம் சரனமய்யா (3) சுவாமி சரணம் ஐயப்பா சரணம். சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா... 

No comments:

Post a Comment